ரூ.18¾ லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி
ரூ.18¾ லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஜோலார்பேட்டை ஒன்றியம் மண்டலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் முதல் கலந்தரா கூட்ரோடு வரை முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சத்து 85 ஆயிரத்தில் தார் சாலை அமைக்க பூமி பூஜை நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கே.ஜி.சரவணன், க.உமா கன்ரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் எம்.மகேந்திரன் வரவேற்றார்.
ஜோலார்பேட்டை தொகுதி க.தேவராஜி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.