பேட்மாநகரம்-வாகைகுளம் இடையே ரூ.1.97 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்


பேட்மாநகரம்-வாகைகுளம் இடையே  ரூ.1.97 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:45+05:30)

பேட்மாநகரம்-வாகைகுளம் இடையே ரூ.1.97 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தில் இருந்து வாகைகுளம் வரை ரூ.1.97 கோடியில் சாலையை அகலப்படுத்தி புதிதாக தார்சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லகண்னு, நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் ஜெயசோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* சாயர்புரத்தில் புதிய பஸ்நிலையம் அமைய இருக்கும் இடத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவுக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்கி மரக்கன்று நட்டினார். தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்த பஸ்நிலையம் வர வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது. அப்பா ஊர்வசி செல்வராஜ் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பல முயற்சிகள் செய்திருந்தார். தற்போது நானும் பஸ்நிலையம் அமைய வேண்டும் என பல முயற்சிகள் செய்து இங்கு பஸ்நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இங்கு குடி தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதற்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல திட்டங்கள் வேகமாக நடைபெற்று வருகிறது" என்றார். நிகழ்ச்சியில் சாயர்புரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story