தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்
உடன்குடியில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி தாண்டவன்காடு சாலையில் பண்டாரஞ்செட்டிவிளை பகுதியில் உள்ள தார்சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாகவும் காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி உடன்குடி பேரூராட்சி மன்ற தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, வார்டு உறுப்பினர்கள் முகம்மது ஆபித், சாரதா ஆகியோர் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட அவர், உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினார்.
இந்த நிலையில் அமைச்சரின் உத்தரவின்பேரில் பண்டாரஞ்செட்டிவிளை பெண்கள் பள்ளி முதல் ரெங்கநாதபுரம், சிவலூர் காலனி வரை தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இப்பணியை பேரூராட்சி மன்ற தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story