திருப்பத்தூரில் ரூ.7 கோடியில் சுற்றுலா மாளிகை கட்டுமான பணி


திருப்பத்தூரில் ரூ.7 கோடியில் சுற்றுலா மாளிகை கட்டுமான பணி
x

திருப்பத்தூரில் ரூ.7 கோடியில் சுற்றுலா தாளிகை கட்டுமான பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் ரூ.6.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பொதுப்பணித்துறை புதிய சுற்றுலா மாளிகை கட்டுமான பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பணி தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.மேலும் ஒருசில அறைகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதை நீளம், அகலம் ஆகியவற்றையை அளவெடுத்து சரிபார்க்கப்பட்டது.

இப்பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டவரப்பட வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பழனி, உதவி செயற் பொறியாளர்கள் தேவன், ரவி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story