ரூ.42 லட்சத்தில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி


ரூ.42 லட்சத்தில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி
x

ரூ.42 லட்சத்தில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்துக்களில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சாமிநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மண்ணுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் ரூ.42 லட்சம் செலவில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அதிகாரி ராமமூர்த்தி ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் வலியுறுத்தினார். ஆய்வின் போது பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி பாலகுருசாமி, துணைத்தலைவர் முருகேஸ்வரி சேதுராஜ், பஞ்சாயத்து செயலர் செந்தில்வேல் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story