கிராம சந்தை கட்டும் பணி


கிராம சந்தை கட்டும் பணி
x

தேவூர் ஊராட்சியில் கிராம சந்தை கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சி, சந்தைப்பேட்டை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் கிராம சந்தை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகளை அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதிக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பெரியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜகோபால், ஊராட்சி தலைவர் வைதேகி ராசு, ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், ஒன்றிய பொறியாளர்கள் பாலச்சந்திரன், ரவிச்சந்திரன் ஊராட்சி செயலாளர் சாமிநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story