உப்பனாற்றில் கட்டுமான பணிகள்
உப்பனாற்றில் கட்டுமான பணிகள் நடந்தது.
திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் காவிரி உப கோட்ட சீர்காழி நீர்வளத்துறையின் மூலம் வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொழுங்கி கட்டுமானப்பணி, தென்னாம்பட்டினம் கிராமம் நாட்டு கண்ணிமண்ணி ஆற்றில் கடைமடை நீரொழுங்கி கட்டுமானப் பணி மற்றும் காவிரி உபகோட்டம் பொறையாறு காலமாநல்லூர் மஞ்சளாறு ஆற்றின் கடைமடை நீரொழுங்கி தடுப்பணை கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிகளை காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்குமாறு பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் பாண்டியன், சீர்காழி உப கோட்ட உதவி பொறியாளர்கள் சரவணன், வெங்கடேசன், உதவி பொறியாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.