ஆற்றில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்


ஆற்றில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்
x

ஆற்றில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளால், வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது.

நீலகிரி

குன்னூர்,

ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த காலத்தில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்வது வழக்கம். இதனால் சாலைகளில் மண்சரிவு, மரம் விழுதல், வீடுகள் இடிதல் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆறுகள், நீரோடைகளை தூர்வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. குன்னூரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயாராக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும், குன்னூரில் கட்டிட கழிவுகளை லாரி மூலம் ஆற்றில் கொட்டி வருகின்றனர். இதனால் மழை காலங்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, குடியிருப்புக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story