லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரூ.11 கோடியில் கட்டுமான பணிகள்


லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரூ.11 கோடியில் கட்டுமான பணிகள்
x

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரூ.11 கோடியில் நடைபெறும் கட்டுமான பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் ரூ.11 கோடியில் பக்தர்களுக்கான ஓய்வு அறை, உணவு அருந்துமிடம், குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மற்றும் ரோப்கார் பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி, முனிரத்தினம் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது கட்டிட பணிகள், ரோப்கார் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். அதைத்தொடர்ந்து ரோப்கார் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மனநலகாப்பக கட்டுமான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தொழில் அதிபர் பூபாலன், மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி, கோவில் உதவி ஆணையர் ஜெயா, தி.மு.க. இளைஞரணி நிர்வாகி சரத்பாபு மற்றும் ரோப்கார் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story