குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளி தற்கொலை


குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 27 Oct 2022 1:15 AM IST (Updated: 27 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். பழரசத்தில் விஷம் கலந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

தர்மபுரி

மாரண்டஅள்ளி:-

குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். பழரசத்தில் விஷம் கலந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

கட்டிட தொழிலாளி

மாரண்ட‌அள்ளி அருகே சின்னபாவளி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் முத்தன் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மாது. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் தனியாக வசித்து வந்தனர். முத்தன் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவி மாதுவுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. முத்தன் அவருடைய மனைவி மாதுவை தாக்கியதாக தெரிகிறது. இதில் கோபம் அடைந்த மாது, பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

விசாரணை

இதனால் விரக்தி அடைந்த முத்தன், பழரசத்தில் விஷம் கலந்து குடித்து விட்டார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் குணமாகவில்லை.

இதனால் முத்தனை, சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முத்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story