சிவதாபுரத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு
சிவதாபுரத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
சேலம்
கொண்டலாம்பட்டி:
ஓமலூர் கோட்டக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் பிரேம்குமார் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் சிவதாபுரம் காட்டூர் சின்னசாமி நகரில் ஒரு வீட்டில் கட்டிட பணிக்கு சென்று இருந்தார். அங்கு கம்பி கட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் இரும்பு கம்பியை உயர்த்தி பிடித்துள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக. மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி மீது இரும்பு கம்பி உரசியது. இதனால் மின்சாரம் தாக்கியதில், பிரேம்குமார் தூக்கி வீசப்பட்டு. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து .கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன். சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story