பாம்பு கடித்து கட்டிட தொழிலாளி சாவு
பொற்றையடியில் பாம்பு கடித்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி
தென்தாமரைகுளம்:
பொற்றையடியில் பாம்பு கடித்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மயிலாடியை சேர்ந்தவர் விஜீகுமார் (வயது 38), கட்டிட தொழிலாளி. இவருக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் விஜீகுமார் தாயாருடன் வசித்து வந்தார். இந்தநிலையில், சம்பவத்தன்று பொற்றையடியில் உள்ள ஒரு தோட்டத்தில் இயற்கை உபாதையை கழித்து விட்டு அங்கு கீழே கிடந்த தேங்காயை எடுக்கும்போது காலில் ஒரு பாம்பு கடித்துள்ளது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் விஜீகுமார் ஏற்கனவே இறந்து விட்டார் என தொிவித்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story