மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி
x

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார்.

மதுரை

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. விவசாயி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டின் மேல் பகுதியில் சென்ட்ரிங் போடுவதற்காக கம்பி கட்டும் பணி நடந்தது.

அங்கு வாடிப்பட்டி அருகே நீரேத்தான் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிச்சாமி (வயது 48) கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக கம்பியை எடுத்த போது அது மின் கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். பழனிச்சாமிக்கு கவிதா என்ற மனைவியும், குபேந்திரன் என்ற மகனும் உள்ளனர். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயாண்டி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story