முசிறியில் பஸ் மோதியதில் கட்டிட தொழிலாளி பலி
முசிறியில் பஸ் மோதியதில் கட்டிட தொழிலாளி பலியானார்.
திருச்சி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அழகப்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி மலர் (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மாலை பணி முடித்து சக பணியாளருடன் மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். முசிறி- தா.பேட்டை ரோடு தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்த மலரின் தலை மீது பஸ் சக்கரம் ஏறி, இறங்கியதில் மூளை சிதறி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரிசெட்டிபாளையம் தெற்கு அர்ஜுன் தெருவை சேர்ந்த டிரைவர் துரைராஜ் (40) என்பவரை கைதுசெய்தனர்.
Related Tags :
Next Story