லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி


லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி
x
தினத்தந்தி 5 Aug 2023 1:15 AM IST (Updated: 5 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

அய்யலூரில் லாரி மோதி கட்டிட தொழிலாளி ஒருவர் பலியானார்.

திண்டுக்கல்

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே உள்ள ஜோதிவிடம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 29). கட்டிட தொழிலாளி, இவர் அய்யலூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் பாச்சாநாயக்கனூர் அருகே சாலையோரம் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக சேலம் மாவட்டம் செந்தாமரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் (49) என்பவர் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரி ரவிக்குமார் மீது மோதியது. இதில் ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story