கட்டிட தொழிலாளி தற்கொலை
கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
திருச்சி உறையூர் லிங்கநகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சத்யா (23). சம்பவத்தன்று உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல வீட்டில் உள்ள அனைவரும் தயாராக இருந்த நிலையில், அன்பழகன் மது அருந்திவிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அன்பழகன் வீட்டின் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story