கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூரில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர்
வேலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். பாண்டுரங்கன், சரவணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் பழனியப்பன், துணை செயலாளர் சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 1-ம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறந்துபோனால் அவரது குடும்பத்துக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story