ரூ.60 லட்சத்தில் கட்டுமான பணிகள்
சித்தேரி, ஆதிசக்தி நகரில் ரூ.60 லட்சத்தில் கட்டுமான பணிகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடங்கிவைத்தனர்.
திருப்பத்தூர் தாலுகா விஷமங்கலம் அருகே உள்ள சித்தேரி கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.14 லட்சத்தில் கட்டும் பணிக்கு மக்கள் பங்களிப்பாக ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை சி.என்.அண்ணாதுரை அரசுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை சித்தேரி கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் ஹேமலதா வினோத்குமார் தலைமை வகித்தார. வட்டார வளர்ச்சி அலுவலர் துரை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி., திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து, கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.ஏ.மோகன்ராஜ், கே.முருகேசன், ஒன்றியக் குழு தலைவர் திருமதி, துணைத் தலைவர் ஜி.மோகன்குமார், ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஆர். தசரதன் நன்றி கூறினார்.
இதேபோன்று ஆதிசக்தி நகரில் ஊராட்சி ஆரம்பப்பள்ளிக்கு ரூ7.80 லட்சம் செலவிலும், ராவுத்தம்பட்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையத்திற்கு ரூ.30 லட்சத்திலும் கட்டிடம் கட்டும் பணியையும், ஆதியூர் ஆலமரத்து வட்டம் பகுதியில் ரூ.8 லட்சத்தில் தரைக்கற்கள் அமைக்கும் பணியையும் பூமி பூஜை போடும்பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.பி.பழனிவேல் வரவேற்றார். சி.என்.அண்ணாதுரை எம்.பி., ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் கே.ஏ.குணசேகரன் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார்கள்.