கம்மாபுரம் வேளாண் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
கம்மாபுரம் வேளாண் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கம்மாபுரம்,
வேளாண்மை உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப குழுவினர் மற்றும் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் கம்மாபுரம் வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். அட்மாக்குழு தலைவர் ராயர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் வேளாண் கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்காக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. இதில் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் காயத்ரி, கால்நடை மருத்துவர் கிருபாகர், தோட்டக்கலை உதவி இயக்குனர் கலைமணி, விதை சான்று அலுவலர் அனு, பட்டு வளர்ச்சி துறை கலைவாணி, வேளாண்மை அலுவலர் ரத்னா, அட்மா திட்ட அலுவலர்கள், வட்டார தொழில் நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி தொழில் நுட்ப மேலாளர் பஞ்சமூர்த்தி, ரமேஷ் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.