வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி

முசிறியில் வாக்குச்சாவடி மைய அலுவலருக்கான ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார்கள் சண்முக பிரியா, சத்யநாராயணன், வட்ட வழங்கல் அலுவலர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் துணை தாசில்தார் விஜய் வரவேற்றார். கூட்டத்தில் முசிறி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் 58 சதவீதம் பேர் ஆதார் இணைத்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்காக சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொட்டியம் தேர்தல் துணை தாசில்தார் தங்கவேல் நன்றி கூறினார்.


Next Story