ஆடி அமாவாசை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்


ஆடி அமாவாசை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் ஆடி அமாவாசை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடந்தது

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில், ஆடி அமாவாசைக்கு கடலில் புனித நீராட வரும் பக்தர்களின் வசதிக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோட்டாச்சியர் மதியழகன் தலைமையில் நடந்தது. தாசில்தார் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். வருகிற 17-ந்தேதி ஆடி அமாவாசையன்று வேதாரண்யம் பகுதியில் உள்ள சன்னதி கடல், கோடியக்கரை ஆதி சேதுகடல், வேதாமிர்த ஏரி, வேதாரண்யம் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தம் போன்றவைகளுக்கு புனித நீராட வரும் பக்தர்களுக்கு தேவையான பஸ் வசதி, மருத்துவ முகாம், சாலை போக்குவரத்து, சுகாதாரப்பணிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தருவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, கடலோர பாதுகாப்பு குழு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், மீன்வளத்துறை சப்-இன்ஸ்பெக்டர் நடேசராஜா, கோவில் செயல் அலுவலர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தாசில்தார் முருகு நன்றி கூறினார். ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தாசில்தார் ஜெயசீலன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகம்மது இப்ராஹிம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் வேதாரண்யம் கடற்கரைக்கு சென்று நீராட வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story