சட்டவிரோதமாக வரும் பார்சல்களை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம்


சட்டவிரோதமாக வரும் பார்சல்களை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
x

திருப்பத்தூரில் சட்டவிரோதமாக வரும் பார்சல்களை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பார்சல் சர்வீஸ் உரிமையாளர்கள் மற்றும் கொரியர் சர்வீஸ் உரிமையாளர்களுடன் சட்ட விரோதமாக வரும் பார்சல்களை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார், டவுன் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

அப்போது மாவட்டம் முழுவதும் போதைப் பொருட்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சட்டவிரோதமாக வரும் பார்சல்களில் போதைப் பொருட்கள் கடத்த வாய்ப்பு உள்ளதால் அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.


Next Story