காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்து கலந்தாய்வு கூட்டம்
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் கிராமங்களின் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பல்வேறு குளறுபடிகளால் பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் செல்லாதநிலையில் அதனை சரி செய்வதற்கான பணிகள் குறித்து விவாதம் நடந்தது. அப்போது, ஊராட்சி மன்றத்தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்களிடம் குறைகள் கேட்கப்பட்டது. மேலும், ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ. ராமர், ஒன்றிய ஆணையர் விஜயகுமார், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய குழுத்துணைத்தலைவர் பாப்பாத்தி சின்னவழியான், பொதுக்குழு உறுப்பினர் தர்மர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.