நிலம் கேட்பு குறித்த ஆலோசனை கூட்டம்


நிலம் கேட்பு குறித்த ஆலோசனை கூட்டம்
x

நிலம் கேட்பு குறித்த ஆலோசனை கூட்டம்

திருவாரூர்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாசில்தார் சந்தானகோபால கிருஷ்ணன் தலைமையில் நிலம் கேட்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தாசில்தார் பேசுகையில், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை இல்லா மாநிலத்தை உருவாக்கும் தமிழக அரசின் உத்தரவின்படி ஊரக பகுதிகளில் இடம் இல்லாத பயனாளிகளுக்கு அரசே விலை கொடுத்து இடம் வாங்கி வீடுகளை கட்டித்தரப்படுகிறது. எனவே கிராம ஊராட்சி பகுதிகளில் தானமாக இடம் வழங்க முன் வருவோரை கண்டறிய வேண்டும். மேலும் விலைக்கு இடம் வழங்க முன் வருபவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் 3 மடங்கு வழங்கி சம்பந்தப்பட்ட பொதுமக்களிடமிருந்து உரிய வகையில் பெற்றுக் கொள்கிறோம். எனவே அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் இதுகுறித்து கவனம் எடுத்துக்கொள்வதுடன் அரசின் திட்டப்பணிகளை நிறைவேற்ற செயல்பட வேண்டும் என்றார். இதில் ஒன்றிய ஆணையர்கள் கலைச்செல்வன், பொற்செல்வி, மண்டல துணை தாசில்தார் ஆனந்தன் மற்றும் வருவாய்த்துறையினர், ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story