வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைப்பது பற்றி ஆலோசனை கூட்டம்
சின்னசேலத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைப்பது பற்றி ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்
சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சின்ன சேலம் தாசில்தார் இந்திரா தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார் மணி முன்னிலை வகித்தார்.
இதில் சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது முழுமை பெற வேண்டும். இதுவரை இணைக்கப்படாமல் விடுபட்டுள்ள வாக்காளர்களை இனம் கண்டு விரைவில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர். இதில் சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story