குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்


குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்
x

பட்டாசு தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மறுநிர்ணயம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் பட்டாசு ஆலைகளில் நடைபெற்றது.

விருதுநகர்


பட்டாசு தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மறுநிர்ணயம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் பட்டாசு ஆலைகளில் நடைபெற்றது.

ஆலோசனை குழு

இதுகுறித்து தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் கூறியதாவது:-

கடந்த 1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச்சட்டம் பிரிவு 5-ன் படி பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய வகைகளை மாற்றியமைக்க மாநில அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க தமிழக அரசு ஒரு ஆலோசனை குழுவினை அமைத்து உத்தரவு பிறப்பித்தது. இந்த குழுவில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த குழுவினர் மேலாமத்தூர், தாயில்பட்டி, மேட்டமலை உள்ளிட்ட பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களிடமும், வேலையளிப்பவர்களிடமும் கருத்துக்களை கேட்டனர்.

கருத்து கேட்பு

மேற்படி களப்பணிகளின் போது பட்டாசு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவரிடம் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது.

கூட்டத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவர் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், செயலாளர் விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ், குழு உறுப்பினர்களான சிவகாசி பொருளாதாரம், புள்ளியியல் துறை உதவி இயக்குனர் ஸ்ரீதர், தொழிற்சங்க பிரதிநிதிகள் மாடசாமி, சமுத்திரம், தேவா, கண்ணன் மற்றும் பட்டாசுஆலை உரிமையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story