பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்


பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் 2,79,831 ஆண் வாக்காளர்கள், 3,02,508 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 13 பேர் என மொத்தம் 5 லட்சத்து 82 ஆயிரத்து 352 வாக்காளர்கள் உள்ளனர். இந்தநிலையில் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், ஒன்றிய நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகளை தொடங்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகளுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது.


Next Story