ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்


ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
x

குடியாத்தத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

வேலூர்

குடியாத்தத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கைத்தறித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து கைத்தறி துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கள்ளூர் ரவி, நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், கவிதாபாபு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், எம்.எஸ்.குகன், ஏ.தண்டபாணி, சுமதிமகாலிங்கம், இந்துமதி கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சேலம் மாவட்ட கைத்தறி துணி நூல் அலுவலர் பி.முத்துராமலிங்கம் தலைமையில் கைத்தறித்துறை அதிகாரிகளும், குடியாத்தம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க துணைத்தலைவர் பி.சரவணன் தலைமையில் சங்க நிர்வாகிகளும், குடியாத்தம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.அண்ணாமலை தலைமையில் நிர்வாகிகளும் கலந்துகொண்டு குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து கலந்து ஆலோசனை நடத்தினர்.

2 ஏக்கர் நிலம் தேவை

கூட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கவும், அந்த ஜவுளி பூங்காக்களின் உட்கட்டமைப்பு, பொது வசதி மையம், தொழிற்கூட கட்டுமான செலவின தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2½ கோடி மாநில அரசு மானியமாக வழங்குவது குறித்தும் அதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

ஜவுளி பூங்கா அமைக்க குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலமும், மூன்று தொழில் கூடங்களும் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஜவுளி பூங்கா அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story