மாநில கல்விக்கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம்


மாநில கல்விக்கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம்
x

மாநில கல்விக்கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில கல்விக்கொள்கை குறித்த மாவட்ட அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு உள்ளூர், மாவட்ட, மாநில அளவிலான கலாசாரம், பண்பாடு மற்றும் வரலாறு தொடர்பான அறிவினை மாணவர்கள் பெறும் வகையிலும், அனைத்து பாடங்களுக்கும் செயல்முறைக் கல்வியும், மனப்பாடம் செய்யும் முறையினை தவிர்த்து, ஆராய்ச்சி மனபாங்கினை வளர்க்கும் வகையிலான மதிப்பீட்டு முறை தேவை என்றும், நீதிபோதனையினை பாடத்திட்டத்தினுள் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் தெரிவித்தனர். இதில், முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story