தா.பேட்டையுில் விநாயகர் சிலை வழிபாடு குறித்து ஆலோசனை கூட்டம்
தா.பேட்டையுில் விநாயகர் சிலை வழிபாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தா.பேட்டை, ஆக.23-
தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமேஸ்வரன், ரவிச்சந்திரன், பாலேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருகிற 31-ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ள 52 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி பின் 3-வது நாள் முசிறி காவிரி ஆற்றில் கொக்குவெட்டியான் கோவில் அருகே கரைப்பது, விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடத்திற்கு மட்டுமே அனுமதி, புதிய இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது, சிலைகள் 10 அடி உயரத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும், சிலை வைக்கப்படும் இடத்தில் கூரை கொட்டகைகள் வைக்கக்கூடாது, தகரக் கொட்டகைகளில் மட்டுமே வைக்க வேண்டும். அனுமதிக்கப் பட்டுள்ள வழியில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும், மசூதி இருக்கும் வழித்தடங்களில் தொழுகை நேரங்களில் சிலைகள் ஊர்வலம் எடுத்து செல்ல அனுமதி இல்லை என வலியுறுத்தப்பட்டது. இதில் விழா குழுவினர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.