பட்டாசு தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்ய கருத்து கேட்பு கூட்டம்
பட்டாசு தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்ய கருத்து கேட்பு கூட்டம் சிவகாசியில் நடந்தது
விருதுநகர்
சிவகாசி,
விருதுநகர் மாவட்டத்தில் 800-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்தநிலையில் இங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வதற்கான கருத்து கேட்பு கூட்டம் நேற்று காலை டான்பாமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் தலைவரும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், குழுவின் செயலாளரும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ், கோட்ட உதவி இயக்குனர் (பொருளாதாரம்) ஸ்ரீதர் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கணேசன், கண்ணன், அனைத்து கட்சி தொழிலாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story