அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம்


அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம்
x

வாக்காளர் சிறப்புத்திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படியும், அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படியும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அரியலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாக்காளர் சிறப்புத்திருத்தம்- 2023 தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள், 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தங்கள் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

மேலும் வாக்குச்சாவடி முகவர் பட்டியல் வழங்காத அரசியல் கட்சியினர் உடனடியாக முகவர் பட்டியல் அனுப்பிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் அனைத்து வாக்காளர்களுக்கும் ஆதார் எண் இணைத்தல் தொடர்பாக முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

இதில் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஆர்.டி.ஓ. பரிமளம் தலைமை தாங்கினார். முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் ஆதார் எண் இணைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story