மருந்து கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்
ஆரணியில் மருந்து கடை உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை
ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் ஆகியோர் மேற்பார்வையில் ஆரணி நகர காவல் நிலையத்தில் மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் ஏஜென்சிகளுடன் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் கொடுக்கக்கூடாது. போதை தரக்கூடிய ஒயிட்னர், இரும்பல் மருந்துகள், போதை மாத்திரைகளை விற்கக்கூடாது. மீறி விற்றால் அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கூரியருக்கு வரும் பர்சல் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் நிர்வாகத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story