கச்சிராயப்பாளையத்தில்கரும்பு அறுவடை தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளிடம் கருத்துகேட்பு கூட்டம்


கச்சிராயப்பாளையத்தில்கரும்பு அறுவடை தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளிடம் கருத்துகேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையத்தில் கரும்பு அறுவடை தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி


கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட விவசாயிகளிடம் கரும்பு அறுவடையின் போது கரும்பு வெட்டும் எந்திரம், சோகை உரிப்பு எந்திரம் ஆகியவற்றை பயன்படுத்துவது தொடர்பாக எந்திர தொழில்நுட்பங்கள், அதன் பரிமாற்றங்கள் குறித்த கருத்துகேட்பு கூட்டம் கச்சிராயப்பாளையத்தில் நடைபெற்றது. இதற்கு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் முருகேசன் தலைமை தாங்கினார். கரும்பு பெருக்கு அலுவலர் செந்தில்குமார், கரும்பு அலுவலர் சேவியர்அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் கரும்புகளை வெட்டும் ஆட்களுக்கு ஏற்படும் கூலி செலவுகள் குறித்தும், அதுவே எந்திரங்கள் மூலம் வெட்டும் செலவுகள் குறித்தும், சோகைகள் உரிக்க பயன்படுத்தப்படும் எந்திரங்கள் அதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்தும் கேட்கப்பட்டது. கூட்டத்தில் கரும்பு பெருக்கு பீல்ட்மேன்கள் ரமேஷ், நீதிவேந்தன், அருள்குமார், கிளார்க் வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர்கள் என்று பலர் கலந்து கொண்டனர். முடிவில் கரும்பு பெருக்கு உதவியாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.


Next Story