சாராயம் ஒழிப்பு குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்


சாராயம் ஒழிப்பு குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிரம்மதேசம் போலீஸ் நிலையம் சார்பில் சாராயம் ஒழிப்பு குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம்

பிரம்மதேசம்

பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் சாராயம் விற்பனையை தடுக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமை தாங்கி பேசினார். அப்போது பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். சாராயம் விற்பனை குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் அனைவரும் போலீஸ் நிலையம் மூலம் உருவாக்கப்படும் வாட்ஸ் அப் குழு மூலம் ரகசியமாக தகவல்களை அளிக்கலாம். முற்றிலுமாக சாராய விற்பனையை குறைக்கும் பட்சத்தில் சாராயம் அற்ற கிராமமாக அறிவிக்கப்படும் என்றார். கூட்டத்தில் பிரம்மதேசம் போலீசார் மற்றும் பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story