நடைபாதை கடை வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம்


நடைபாதை கடை வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
x

கண்ணமங்கலம் பேரூராட்சியில் நடைபாதை கடை வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்து சாலையோர வியாபாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.

பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இதில் கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், துணைத்தலைவர் குமார், வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, வார்டு கவுன்சிலர்கள் உள்பட சாலையோரம் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் வருங்காலங்களில் பழைய ரோட்டில் குளம் அருகே காய்கறி கடைகள், பழக்கடைகள் வைத்து வியாபாரம் செய்வது உள்பட வியாபாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் பேருராட்சி முன்னாள் தலைவர் கோவர்த்தனன் கூறுகையில், நடைபாதைக்கடைகள் வியாபாரிகள் ஒருவருக்கொருவர் இடைஞ்சலின்றி கடைகள் வைத்து வியாபாரம் செய்யவேண்டும். என்றார்.


Next Story