வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம்


வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2023 12:30 AM IST (Updated: 22 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் நகராட்சியில் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தேனி

கம்பம் நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார். ஆணையர் பாலமுருகன், தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன், அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் போக்குவரத்தை மாற்றி அமைக்கவும், புதிய பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பழைய முன்பதிவு கூடத்தை மாற்றவும் நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர். பஸ்நிலையத்துக்குள் அனுமதியின்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், ஷேர்ஆட்டோக்களை பஸ்நிலையம் அருகே நிறுத்துவது தடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. பஸ்நிலையத்தில் உள்ள கடைகளுக்கு தேவையான குடிநீர் குழாய்கள், கழிவுநீர் கால்வாய் வசதிகள் விரைவில் அமைக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் கூறினார். இதில் வியாபாரிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story