கழிவுநீர் தொட்டிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் ஆலோசனை கூட்டம்


கழிவுநீர் தொட்டிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் ஆலோசனை கூட்டம்
x

ஆரணி நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் தொட்டிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

ஆரணி நகராட்சி அலுவலகத்தில் மலக்கசடு அகற்றும் லாரி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஆணையாளர் பி.தமிழ்செல்வி தலைமையில் நடந்தது. நகராட்சி பொறியாளர் டி.ராஜவிஜயகாமராஜ், இளநிலை பொறியாளர் வி.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி கலந்து கொண்டார்.

கூட்டத்தில், கழிவுநீர் அமைப்பு மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் தொழிலாளர்கள் நுழைவதை தடை செய்தும், மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதோ, அகற்றுவதனை தடை செய்தும் சட்ட விதிகளை உருவாக்கி உத்தரவிட்டுள்ளது. மலக்கழிவுகளை திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் வெளியேற்றுவதால் பொது சுகாதாரத்துக்கும், மனித உயிர்களுக்கும் ஆபத்தினை ஏற்படுத்துவதால் மலக்கசடு, கழிவுநீர்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை ஒழுங்குப்படுத்துவது அவசியமாகிறது. மலக்கசடு, கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் நகராட்சியில் அனுமதி பெற வேண்டும். அதற்காக ரூ.2 ஆயிரம் செலுத்தி சான்று பெற்று இருந்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் மலக்கசடுகளை அகற்றுவதற்கு உரிமம் கிடைக்கும். மேலும் அவற்றினை வந்தவாசி மற்றும் வேலூர் பகுதியில் மட்டுமே எடுத்துச் சென்று வெளியேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதில் சுகாதார கள ஆய்வாளர்கள் சரவணகுமார், பாபுஜி, களப்பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


Next Story