போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்தேர்வு மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை
தூத்துக்குடியில் நடைபெற உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வை முன்னிட்டு தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடியில் நடைபெற உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வை முன்னிட்டு தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இன்றும் (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 965 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு தூத்துக்குடியில் உள்ள 7 மையங்களில் நடக்கிறது.
ஆலோசனை கூட்டம்
இந்த தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார். போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரைவழங்கினார். தேர்வு பாதுகாப்பு பணியில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆவுடையப்பன், சங்கர், பிரேமானந்தன், சம்பத, சிவசுப்பு, கண்ணபிரான், ஷாமளா தேவி மற்றும் போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.