போலீசாருக்கான ஆலோசனை கூட்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆலோசனையின் பேரில் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் வழக்கு கோப்புகளை எழுதும் எழுத்தர்களுக்கு பயிற்சி வழங்குவது மற்றும் அந்தந்த போலீஸ் நிலையத்தில் பாரபட்சம் இல்லாமல் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன தொடர்பான காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமை தாங்கி குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது மற்றும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது மற்றும் நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம், செய்துங்கநல்லூர், சேரகுளம், ஆழ்வார்திருநகரி, ஏரல், சாயர்புரம், குரும்பூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், வழக்கு கோப்புகளை எழுதும் எழுத்தர்கள், சிறப்பு தனிப்படை காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.