கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தாசில்தார் அ.கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, பெ.மனோகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா.வேலு, ஆனந்தராஜ், ரமேஷ்குமார், ஆனந்தஜோதிலட்சுமி, நந்தகோபி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மத்திய அரசின் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தருவதற்கான கணக்கெடுப்பு பணி விவரம், நிலுவையில் உள்ளவை, வீடு கட்டுவதற்கான தகுதி உள்ளவர்களை தேர்வு செய்தல், தனிப்பட்டா, கூட்டுப்பட்டா விவரங்கள், திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றை ஆய்வு செய்து பயனாளிகளைத் தேர்வு செய்வது, தகுதியின் அடிப்படையில் வருவாய் துறையினர் மூலம் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அரசின் பயன்கள் பயனாளிகளை குறித்த நேரத்தில் சென்றடைய பணிகளை விரைந்து முடிக்க ேவண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உத்தரவிட்டார். இதில் கே.வி.குப்பம் தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.