திண்டிவனம்-நகரி ெரயில் பாதை திட்டத்தில் நிலமிழக்கும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
வந்தவாசியில் திண்டிவனம்-நகரி ெரயில் பாதை திட்டத்தில் நிலமிழக்கும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வந்தவாசி
விவசாயிகள் சங்கம் சார்பில் திண்டிவனம்-நகரி ெரயில் பாதை திட்டத்தில் நிலமிழக்கும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் வந்தவாசியில் நடந்தது.
சங்க தலைவர் ந.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினாா். வட்ட செயலாளர் ஜா.வே.சிவராமன், மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சட்டரீதியாக ஏற்படும் நன்மைகள் விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில் நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வில் ஒளிவுமறைவற்ற தன்மை சட்டம் 2013-ன் படி இத்திட்டத்தில் நிலமிழக்கும் விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.
மறுகுடியமர்வு, மீள்குடியமர்வு ஏற்பாடுகளை முறையாக அமல்படுத்த வேண்டும்.
விவசாயிகள் மத்தியில் வெளிப்படையான முறையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.