அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
அரியலூர்
அரியலூரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம் 2) அலுவலகத்தில், நல வாரியத்தில் இ-சார்ம் திட்டத்தில் பதிவு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, உதவி ஆணையர் விமலா தலைமை தாங்கி பேசுகையில், வீட்டு பணியாளர்கள், விவசாயம், தச்சு, கல்குவாரி, மர ஆலை, முடி திருத்துவோர், தோட்ட தொழிலாளர், செய்தித்தாள் வினியோகம் செய்பவர் உள்பட 156 அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண், ஆதார் அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் பொது சேவை மையத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும், என்று கூறினார். இந்த கூட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story