மேல்விஷாரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆலோசனை கூட்டம்
மேல்விஷாரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை
ஆற்காடு
மேல்விஷாரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகரில் தமிழ்நாடு அரசு தொழில் வணிக வரித்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் எஸ்.டி. முகமத்அமீன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குல்சார் அஹமது முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தொழிலதிபர்கள், வணிகர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு வணிக கடன் எவ்வாறு பெறுவது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story