குற்றச்செயல்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்


குற்றச்செயல்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
x

குற்றச்செயல்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதினால் கிராமங்களில் இரவு நேரத்தில் வீடுகளில் பொதுமக்கள் தூங்காமல் வீட்டின் வெளிப்புற திண்ணையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இரவு டவுசர் கொள்ளையர்கள் நோட்டமிட்டு நகைகளை பறித்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இவைகளை கட்டுப்படுத்தும் வகையில், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் அப்பகுதியில் இரவு நேர பாதுகாவலர்களை அமைத்து திருட்டில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும். வீடுகளில் பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் தூங்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் செரியலூர் இனாம், கொத்தமங்கலம், சேந்தங்குடி, நகரம், ஜமீன், வேம்பங்குடி, கிழக்கு-மேற்கு மேற்பனைக்காடு, குளமங்கலம், வடக்கு-தெற்கு பனங்குளம், பெரியாளூர் ஆகிய கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story