முதல்-அமைச்சர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்


முதல்-அமைச்சர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
x

திருப்பத்தூருக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21-ந் தேதி திறந்துவைக்க வருகிறார். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, தேவராஜ், வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார், திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சரை வரவேற்க தி.மு.க. சார்பில் ஆம்பூர் ஓ.ஏ.ஆர். தியேட்டர், வாணியம்பாடி பஸ் நிலையம், ஜோலார்பேட்டை மெயின் ரோடு, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரில் ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வரும் வழிகளில் செய்ய வேண்டியபாதுகாப்பு, வழிகளில் மேடைகள் அமைத்து அதில் நடன நிகழ்ச்சிகள், பாட்டு கச்சேரி, வீர விளையாட்டுகள் நடத்த உள்ள இடங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முதலமைச்சர் பாதுகாப்பிற்காக வரும் கான்வாய் செல்லும் பாதை மற்றும் மேடை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story