உயர்கல்வி தொடர்பான ஆலோசனை கூட்டம்
உயர்கல்வி தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவர்கள் உயர் கல்வி மற்றும் அதிக வேலை வாய்ப்பு உள்ள படிப்புகளை பற்றியும் அதற்கான கல்வி நிறுவனங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் வகையில் விழுதுகளை வேர்களாக்கும் உயர்கல்வி ஆலோசனை வழங்கும் கூட்டம் விருதுநகர் அருகே உள்ள ஏ.ஏ.ஏ. என்ஜினீயரிங் கல்லூரியில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் மாவட்டத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Related Tags :
Next Story