அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்


அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்
x

அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் இ-ஷ்ரம் வலைதளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்வது தொடர்பாக கரூர் மாவட்டத்திலுள்ள மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள், என்.ஜி.ஓ. மற்றும் பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமை தாங்கினார். மத்திய அரசின் இ-ஷ்ரம் வலைதளத்தில் 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் https://eshram.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ., பி.எப். மற்றும் என்.பி.எஸ். பிடித்தம் செய்யப்படுபவர்களாகவும், வருமான வரி செலுத்துபவர்களாகவும் இருக்க கூடாது. பதிவு செய்ய ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் அவசியம்.

மத்திய அரசின் இ-ஷ்ரம் வலைதளத்தில் அதிகளவில் அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவேற்றம் செய்ய அனைத்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வணிக அமைப்புகள் தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களையும் பொது சேவை மையத்துடன் இணைந்து மேற்படி வலைதளத்தில் விடுதலின்றி பதிவு செய்யலாம். கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொழிலாளர்களும், இவ்வலைதளத்தில் பதிவு செய்யலாம். மேற்படி வலைதளத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பிரதான் மந்திரி சுரக்ஷா திட்டத்தின்கீழ் விபத்து காப்பீடு வழங்கப்படும். மேலும் தொழிலாளர்கள் பணி செய்யும் இடங்கள், வசிப்பிடங்கள் மற்றும் வட்டார அளவில் தொழிலாளர் துறை சார்பாக நடத்தப்பட உள்ள முகாம்களில் அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்ய மேற்படி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


Next Story