போலீசார் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்


போலீசார் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x

குற்றவாளிகளை கைது செய்யும் போது போலீசார் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் போது போலீசார், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு நிஷா விளக்கி பேசினார். மேலும் முதியவர்கள், பெண்கள் மற்றும் மது அருந்தியவர்களை கைது செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கூட்டத்தில் தனிப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா உள்பட மயிலாடுதுறை உட்கோட்ட பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், தனிப்படை போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story