முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
x

சோளிங்கரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20-ந் தேதி ராணிப்பேட்டையில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து பல்வேறு நலத் திட்டங்களை வழங்க வருகிறார். அவருக்கு சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வரவேற்ப்பு அளிப்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ் சவுந்தரராஜன், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பிரபாகரன் வரவேற்றார்.

கூட்டத்தில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்க வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான‌ வரவேற்ப்பு அளிக்க வேண்டும், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நல திட்டங்களை வழங்க உள்ளார் இதில் சோளிங்கர் ஒன்றியத்தில் நல திட்டங்களை பெறவுள்ள பயனாளிகள் அனைவருக்கும் தெரிவித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் கரங்களால் நல திட்டத்தை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். ஊராட்சியில் உள்ள அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்களும் பங்கேற்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என‌ ஒன்றியக்குழு தலைவர் ஆலோசனை வழங்கினார். இதில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 40 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர் கலந்து கொண்டனர்.


Next Story